பங்குச் சந்தை : 8 வருடங்கள் இல்லாத அளவு சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி.

மும்பை

ங்குச் சந்தை புள்ளிகளான சென்செக்ஸ் இந்த 8 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் பங்குகள் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். நேற்று மட்டும் பங்குச் சந்தை புள்ளிகளான சென்செக்ஸ் 146 புள்ளிகள் வீழ்ந்துள்ளன. இது கடந்த 8 ஆண்டுகளில் நடந்துள்ள அதிக அளவிலான வீழ்ச்சி ஆகும். இதை போல் 8 வருடங்களுக்கு முன்பு இத்தகைய வீழ்ச்சியை பங்குச் சந்தை சந்தித்தது.

நேற்று அதிக அளவில் விற்பனையான டிசிஎஸ், என்டிபிசி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கிகளின் பங்குகளின் மதிப்பும் மிகவும் குறைந்துள்ளன. முக்கியமாக வேதாந்தா, ஐசிஐசிஐ மற்றும் ஓ என் ஜி சி ஆகிய பங்குகள் மட்டுமே ஓரளவு லாபத்தை அளித்தன என கூற வேண்டும்.

நேற்று சென்செக்ஸ் புள்ளிகள் குறைவால் முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில்  18 நிறுவனப் பங்குகள் நஷ்டத்துடனும் 12 நிறுவனப் பங்குகள் ஓரளவு லாபத்துடன் விற்பனை ஆகின.

இது குறித்து பங்குச் சந்தை ஆலோசனை நிறுவனமான ஷேர்கான் நிறுவன தலைவர் ஹேமங் ஜானி, “இந்திய நிறுவனங்களின் பங்குகள் விலை கடுமையான சரிவை கண்டுள்ளன. இதற்கு சந்தையின் பலவீன தன்மையும் வர உள்ள பொதுத் தேர்தலும் காரணம் ஆகும். தற்போது கச்சா எண்ணெய் விலை மாற்றமின்றி உள்ளது.

எனவே அரசு அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கி மக்களின் வருமானத்தை அதிகப்படுத்த தற்போது பொருத்தமான தருணம் உள்ளது. அவ்வாறு நடந்தால் முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் ஆர்வம் செலுத்த வாய்ப்புள்ளது. அத்துடன் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்தாலும் இந்திய பங்குச் சந்தை உயர வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.