ஆஸ்திரேலியாவில் அலைச்சறுக்கு வீரரை தாக்கிய சுறா

கான்பெரா:

ஆஸ்திரேலியாவில் சர்வதேச அலைச்சறுக்கு லீக் போட்டிகள் நடைபெற இருந்தன. கிரேஸ் டவுன் கடற்கரையில் அலைச்சறுக்கு வீரர் ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென சுறா மீன் ஒன்று அந்த வீரரை பயங்கரமாக தாக்கியது.

சுறாவிடம் இருந்து தப்பிக்க போராடினார். காலில் லேசான காயத்துடன் சுறாவிடம் இருந்து அவர் தப்பினார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதைதொடர்ந்து பாதுகாப்பு கருதி அலைச்சறுக்கு போட்டிகள் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு உறுதி செய்த பின் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.