லண்டன்:

அரிய வகை சுராக்கள் அழிந்து வருவதால், இங்கிலாந்தின் இறக்குமதி வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுறா மீன் உலகம் முழுவதும் மக்கள் உண்ணும் உணவாகியிருக்கிறது. கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை சுறா மற்றும் அதே இன மீன்களின் ஏற்றுமதி உலக அளவில் 42% உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு கூறியுள்ளது.

சுறா வகைகளில் 12 இனங்கள் அரிதாகி வருவதால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இத்தகைய அரிய வகை சுறாக்கள் உணவுக்காக பயன்படுத்தப்பட வேண்டுமா என்ற விவாதம் விஞ்ஞானிகளின் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது.

அதிக அளவில் சுறா மீன்கள் பிடிக்கப்படுவதால், முட்டை உருவாவதற்கும் குஞ்சு பொரிப்பதற்குமான வாய்ப்பு குறைந்து கொண்டே போவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இதேபோன்று, டாக் ஃபிஷ் எனப்படும் சிறு வகை சுறா மீன்கள் அட்லாண்டிக் பெருங்கடலின் வடகிழக்குப் பகுதியில் கிடைக்கிறது. இதுவும் அரிய வகை இனத்தில்  சேர்க்கப்பட்டுள்ளது.

எந்த வகை சுறாக்களை சாப்பிடுகிறார்கள் என மீன் பிரியர்களுக்கே தெரிவதில்லை.  இங்கிலாந்து ஓட்டல்களில் கொம்பை சுறா என்ற பெயரில் 10 வகையான சுறா இனங்கள் விற்கப்படுகின்றன  என்கிறார் எக்ஸெட்டர் பல்கலைக்கழக பேராசிரியர் கேத்தரின் ஹோப்ஸ்.