‘அசுரன்’ இந்தி ரீமேக்கில் நடிக்க விரும்பும் ஷாருக்கான்….!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் உள்பட பலர் நடிப்பில் கடந்த 4ம் தேதி வெளியான படம் ‘அசுரன்’.

இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து வந்தார் . பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வந்த இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார் .

இந்தப் படம் 10 நாட்களில் மொத்த வசூலில் ரூ.50 கோடியைக் கடந்துள்ளது. மேலும், திரையரங்க வியாபாரம், இசை உரிமை, தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம், வெளிநாட்டு உரிமம் என ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.

இந்த நிலையில் அசுரன் படத்தை தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. தெலுங்கில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். எஸ்.தாணு, சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ‘அசுரன்’ படத்தை இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் பார்த்து வியந்ததாக கூறப்படுகிறது. இந்தி அசுரன் படத்தில் ஷாருக்கானே நடிக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி