ஷாரூக் கானின் அலுவலகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக மாற்றியமைக்கப்பட்டுள்ள வீடியோ….!

--

ஷாரூக் கானின் அலுவலகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக மாற்றியமைக்கப்பட்டுள்ள வீடியோ….!கொரோனா தொற்று இருப்பவர்களைத் தனிமைப்படுத்தலில் இருக்க நடிகர் ஷாரூக் கான், மும்பையில் இருக்கும் தனது 4 மாடி அலுவலகக் கட்டிடத்தை மும்பை மாநகராட்சிக்கு தற்காலிகமாகக் கொடுத்தார்.

இந்த அலுவலக கட்டிடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக எப்படி மாற்றப்பட்டுள்ளது என்ற வீடியோவை அவரது மனைவி கவுரி கான் வெளியிட்டுள்ளார்.

இந்தப் பணியை கவுரி கான் நடத்தும் கவுரி கான் டிசைன்ஸ் நிறுவனமும், மீர் அறக்கட்டளையும் சேர்ந்து முடித்துள்ளது.

தற்போது இந்தக் கட்டிடத்தில் 22 படுக்கைகள், பாதுகாப்பான இடைவெளியில் போடப்பட்டுள்ளன.