உலக அழகியை “சில்லறையுடன்” ஒப்பிட்ட சசி தரூர் மன்னிப்பு

--

 

டில்லி:

லக அழகி பட்டம் வென்ற மானுஷி சில்லரை, சில்லறை நாணயங்களுடன் ஒப்பிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், அதற்காக  மன்னிப்பு கோரியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மானுஷி சில்லர் சில தினங்களுக்கு முன் உலக அழகி பட்டத்தை  வென்றார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “‛ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மிகப்பெரிய தவறு. சர்வதேச அளவில் இந்திய பணத்திற்கு மதிப்பு இருக்கறது.  அதனால் தான் சில்லர்(ஹிந்தியில் சில்லறை நாணயம்) கூட உலக அழகியாகிவிட்டது” என்று சசி தரூர் பதிவிட்டிருந்தார்.

 

இதற்கு தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

 

இதையடுத்து சசிதரூர் மன்னிப்பு கோரியுள்ளார். “சில்லர் குறித்து தான் விளையாட்டாக கருத்து கூறினேன். இதனால் யாரேனும் மனம்  புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று ச்சிதரூர் ட்விட்டியுள்ளார்.