மத்திய அமைச்சருக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் நோட்டிஸ்

டில்லி

ன்னை கொலைக் குற்றவாளி என சொன்ன மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் பிரதமர் மோடியை குறித்து ஒரு புத்தகம் எழுதி உள்ளார். ”முரண்பாடான பிரதமர்” என்னும் தலைப்பில் அவர் எழுதிய புத்தக வெளியீட்டு ”ஒரு பெயர் அறியாத ஆர் எஸ் எஸ் தொண்டர் பிரதமர் மோடி பற்றி விமர்சித்துள்ளார். அந்த தொண்டர் மோடி சிவலிங்கத்தில் அமர்ந்துள்ள பாம்பு என் குறிப்பிட்டுள்ளார். அந்த பாம்பை கைகளால் அகற்ற முடியாது செருப்பால் அடித்தும் துரத்த முடியாது என அந்த தொண்டர் சொல்லி உள்ளார்” என சசி தரூர் கூறினார்.

அதற்கு  மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசி தரூர் சிவ்னைப் பற்றி கேவலமாக பேசி உள்ளார். தன்னை சிவ பக்தர் என கூறிக் கொள்ளும் ராகுல் காந்தி இதற்கு என்ன பதில் தரப்போகிறார் என நான் கேட்கிறேன். காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இந்துக் கடவுளை கேவலமாக பேசியதற்காக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இந்துக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்” என டிவிட்டரில் பதிவிட்டார்.

அதை ஒட்டி தன்னை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என கூறியதற்காக நோட்டிஸ் ஒன்றை சசி தரூர் அனுப்பி உள்ளார். இது குறித்து சசி தரூர், “என்னை பற்றி தவறாகவும் எனது புகழைக் கெடுக்கும் வகையிலும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்க்ருத்துக்கள் கூறி வருகிறார். அடை ஒட்டி நான் அவ்ருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளேன். என் மீது கொலைக் குற்றம் உள்ளதாக் தவறான தகவல் அளித்த சட்ட அமைச்சர் அதற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.

சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த வழக்கில் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாகவும் சசிதரூர் அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.