மக்கள் அபிமானத்தைப் பெற முடியாதவர் சசிகலா: பாஜக கருத்து

டெல்லி:

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்துதெரிவித்த பாஜகவின் தேசிய செயலர் முரளிதர் ராவ், மக்கள் அபிமானத்தைப் பெற முடியாதவர் சசிகலா என்று தெரிவித்துள்ளார்,

மேலும் அதிமுக என்ன மாதிரியான தலைமையை முன்னிறுத்தும் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இதே வழக்கில் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபணமானபோது அவருக்கு விசுவாசமாக ஒருவரை அவரால் முதலமைச்சர் பொறுப்பில் முன்னிறுத்த முடிந்தது. அது மாதிரி நம்பத்தகுந்த நபரை சசிகலாவால் முன்னிறுத்த முடியுமா என்பது சந்தேகம்தான் என்றும் முரளிதரராவ் தெரிவித்தார்..