பாட்னா:

பாஜக மூத்த தலைவரும், நடிகருமான சத்ருகன் சின்ஹா இன்று காங்கிரஸ் கட்சியில் அதிகாரப் பூர்வமாக இணைந்தார்.

ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் கட்சி  தலைவர் ராகுல் காந்தியை டில்லிடியில் சந்தித்து பேசியிருந்த நிலையில், இன்று  முறைப்படி காங்கிரஸ் கட்சியில்  இணைந்தார்.

வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்த பாலிவுட் நடிகரான சத்ருகன்சின்ஹா,   பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் சமீப காலமாக மோடி தலைமை யிலான பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு  எதிராக கருத்து கூறியதால், அவரை பாஜக தலைமை ஒதுக்கி வைத்திருந்தது. அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பும்  வழங்கப்படவில்லை.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுலை சந்தித்து பேசிய சத்ருகன் சின்ஹா

இந்த நிலையில், சத்ருகன்சின்ஹா காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடந்த வாரம்  சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், சத்ருகன்சின்ஹா பாஜக உருவான நாளான இன்று பாஜகவில் இருந்து விலகி, முறைப்படி,  காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மற்றும் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா முன்னிலையில் இணைந்தார்.