டெல்லி காங்கிரஸ்   தலைவராக ஷீலா தீட்சித் நியமனம்

புதுடெல்லி:

*டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டார்.

அஜய் மக்கான் அண்மையில் டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகியதால் ஷீலா தீட்சித்தை நியமனம் செய்து ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஷீலா தீட்சித் 3 முறை டெல்லி முதல்வராக பதவி வகித்திருக்கிறார்.