மகாராஷ்ட்ராவின் மராத்வாடா பகுதியில் கடும் வறட்சி: குடிநீர் இன்றி கால்நடைகள் தவிப்பு

மும்பை:

மகாராஷ்ட்டிராவின் மராத்வாடா பகுதியில் கடும் வறட்சியின் காரணமாக கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.


மழை இல்லாதததால் மராத்வாடா பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. கடும் வறட்சியால் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு விவசாயிகள் தவிக்கின்றனர்.

இந்நிலையில், ஆடு,மாடுகளுக்கு குடிநீர் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கால்நடை முகாமை அரசு திறந்தது. இங்கு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. ஆடுகளை அனுமதிக்கவில்லை.

உணவு, குடிநீர் தட்டுப்பாட்டால் ஆடுகள் நோய்வாய்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.