சீன மொழியிலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த ‘த்ரிஷ்யம்’ ரீமேக்…!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013-ல் வெளியான மலையாள படம் ‘த்ரிஷ்யம்’.

இதன் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

2017-ல் இலங்கையில், சிங்கள மொழியிலும் ‘த்ரிஷ்யம்’ ரீமேக் செய்யப்பட்டது.

2017-ம் ஆண்டு ‘த்ரிஷ்யம்’ படத்தின் சீன மொழி ரீமேக் உரிமையை அந்த நாட்டைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்று வாங்கியது. தற்போது அந்தப் படம் ‘ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்ட்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர் இந்திய ரசிகர்களிடையே வைரலாகப் பகிரப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் மூன்று நாட்களில் 32 மில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.