சென்னை,

ட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டியின் 14 கோடி மதிப்பிலான 50 கிலோ தங்கம் அமலாக்கத்துறையால்  முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை தி.நகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர்  8ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ஏராளமான பணம், நகை மற்றும் முக்கிய ஆவனங்களை கைப்பற்றினர்.

இந்த சோதனையின்போது அவரிடமிருந்து  178 கிலோ தங்கம், 142 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சேகர் ரெட்டியின் சொத்துக்கள் ஏற்கனவே வருமானவரித் துறையால் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேகர்ரெட்டியிடம் இருந்து சோதனையின்போது கைப்பற்றப்பட்ட 14 கோடி மதிப்பிலான 50 கிலோ தங்கம் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.68 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.  பணமதிப்பு நீக்க விவகாரத்தில் சேகர் ரெட்டியிடம் பலகோடி ரூபாய் புதிய நோட்டுகளை ஏற்கனவே  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.