தர்ஷன் – சனம் ஷெட்டி பிரிவுக்கு காரணம் நானா? கொட்ஜிக்கும் ஷெரின்….!

https://www.instagram.com/p/B9oHbS1FIEI/

தர்ஷன் – சனம் ஷெட்டி இருவரும் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் . அங்கு சக போட்டியாளரான ஷெரினுடன் நெருக்கமாகி பழகி வந்தார் .

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள், ஷெரினுடன் தர்ஷன் நெருக்கம் காட்டியதுதான் காரணம் என சனம் ஷெட்டியும் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

இருவரின் பிரிவுக்கு ஷெரின் எந்தவொரு கருத்துமே தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், தர்ஷன் – சனம் ஷெட்டி பிரிவு தொடர்பாக ஒரு நீண்ட கடிதத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷெரின் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன, நடந்திருக்கின்றன. என்னைத் தாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாகச் செய்யட்டும். நான் இதில் தெரிந்துதான் ஈடுபட்டேன். என்னை நீங்கள் எவ்வளவு மோசமான பெயர்கள் கொண்டு அழைத்தாலும் என்னால் அதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், இந்த விஷயத்தில் என் குடும்பத்தை இழுக்காதீர்கள் என்று ஒரு நீண்ட கடிதத்தை பதிவிட்டுள்ளார் .