டில்லி : ஹுமாயூன் ஸ்தூபியை இடிக்க அனுமதி மோடிக்கு கேட்டு கடிதம்!

டில்லி

பி மத்திய ஷியா வக்ஃப் போர்ட் ஹுமாயூன் ஸ்தூபியை இடிக்க அனுமதி கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது

டில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் ஹுமாயூன் ஸ்தூபி.  இது 1569-70களில் சக்கரவர்த்தினியாக இருந்த முகலாய அரசி ஹாஜி பேகம் என்பவரால் அவரது கணவரின் பெயரில் கட்டப்பட்டது.  இது யுனெஸ்கோவால் உலகத்தின் புராதனக் கட்டிடம் என 1993ல் அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த ஸ்தூபியில்  பல முகலாய மன்னர்கள், அரசிகள், மற்றும் இளவரசர்களின் சமாதிகள் உள்ளன.

கடந்த அக்டோபர் 15 தேதியிட்ட கடிதம் ஒன்றில் அகில இந்திய ரப்தா ஈ மஜித் மற்றும் மதரசே இச்லாமியா ஆகிய இரு இஸ்லாமிய அமைப்புகளும் இஸ்லாமியர்களுக்கான இடுகாடுகளுக்கான இட வசதி செய்து தரவேண்டும் என உ பி மத்திய ஷியா வக்ஃப் போர்டை கேட்டுக் கொண்டது.  அந்த இட வசதிக்காக உபயோகப் படுத்தாமல் உள்ள பழைய இஸ்லாமிய இடுகாளில் உள்ள கட்டிடங்களை இடித்து விட்டு அந்த இடத்தை அளிக்கலாம் எனவும் யோசனை தெரிவித்தது.     இந்த இட ஒதுக்கீடு தலைநகரிலோ மற்றும் அருகில் உள்ள இடங்களிலோ இடம் கேட்டிருந்தது.

ஷியா போர்ட் பல இடங்களையும் ஆய்வு செய்து விட்டு இறுதியாக டில்லியில் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஹுமாயூன் ஸ்தூபியை இடித்து விட்டு அந்த இடத்தை இஸ்லாமியர்கள் இடுகாடாக உபயோகிக்கலாம் என யோசனை தெரிவித்தது.   தனது யோசனையை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தது.  இது குறித்து போர்ட் அந்த கடிதத்தின் நகலுடன் தகவல் தெரிவித்துள்ளது.

போர்ட் தெரிவிப்பது, “ஹுமாயூன் ஸ்தூபி என்பது மதச்சம்பந்தப்பட்ட இடம் இல்லை.  அது ஏற்கனவே இடுகாடாக பயன்படுத்திய இடம் தான்.   அங்கு புதைக்கப்பட்டிருக்கும் முகலாயர்கள் இந்தியாவை திருட வந்தவர்கள்.   ஏற்கனவே ஆட்சி புரிந்த அரசர்களை அழித்து தங்கள் அரசை அமைத்தார்கள்.  இங்கிருந்து திருடிய சொத்துக்களை தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றவர்கள்.   தவிர அவர்கள் இஸ்லாமிய தூதர்களோ திறமையான ஆட்சியாளர்களோ இல்லை.  அதனால் அந்த சமாதிகள் புராதனக் கட்டிடம் என்னும் பெருமைக்கு பொருத்தமானவை அல்ல.

மேலும் இஸ்லாமிய மத நெறிப்படி இவைகள் கட்டப்படவில்லை.  எத்தனையோ கோயில்களை இடித்தவர்களின் சமாதிகளை இடிப்பதில் தவறில்லை.  தேவை இல்லாமல் அரசு இந்த ஸ்தூபிகளை பராமரிக்க செலவு செய்து வருகிறது.  இது போல பணத்தை வீணாக்குவதை விட அதை புராதனக் கட்டிடங்கள் பட்டியலில் இருந்து விலக்கி விட்டு இடித்து விடலாம்.  அதன் மூலம் இஸ்லாமிய மக்கள் பயன் பெருவார்கள். ” என காரணம் கூறி உள்ளது.

இது குறித்து பிரதமர் மோடியோ அல்லது பிரதமரின் அலுவலக அதிகாரிகளோ இதுவரை தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed