தீவிர சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள யாஷிகா ஆனந்த்…!

https://twitter.com/iamyashikaanand/status/1201502872287858688

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.

இந்த நிலையில், தற்போது தீவிரமாக சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் .

அதில், ஆக்‌ஷன் என்று ஒருவர் கூறும் போது, அதற்கு காலால் எட்டி உதைப்பது போன்று அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது. இதன் மூலம் அவர் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.