அர்ஜூனா விருது: ஷிகர் தவான், ஸ்மிரிதி மந்தணா பெயர்கள் பரிந்துரை

டில்லி:

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் அர்ஜூனா விருது வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிரிதி மந்தணா ஆகியோரது பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த விருதுடன் ரூ. 5 லட்சம் மற்றும் பாராட்டுச் பத்திரம் வழங்கப்படும். 2001ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டுகள், ஆசிய விளையாட்டுகள், காமன்வெல்த் விளையாட்டுகள், உலக கோப்பை, உலக சாதனையாளர் துறைகள், கிரிக்கெட், இந்திய பரம்பரை விளையாட்டுகள், உடல் நலிவடைந்தோர் விளையாட்டுகள் போன்ற பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.