சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டியில் 118 இன்னிங்சில் 5000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றார். இதன மூலம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலியின் சாதனையை தவான் சமன் செய்துள்ளார்.

dhawan

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் நாள் போட்டி இன்று நேப்பியரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டியில் தொடக்கத்தில் இருந்தே இந்திய பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது.

இதன் காரணமாக கேப்டன் வில்லியம்சை தவிர்த்து பிற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 4விக்கெடுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்ட வீரர்களான தவான் மற்றும் ரோஹித் வழக்கம் போல் நல்ல துவக்கம் அளித்தனர். இதில் 40 ரன்களை கடந்த தவான் சர்வதேச அளவிலான ஒருநாள் அரங்கில் 118 இன்னிங்சில் 5000 ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 114 இன்னிங்சில் 5000 ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார்.

இந்த மைல் கல்லை எட்டிய தாவான் முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலியின் சாதனையையும், விண்டீஸ் அணி வீரர் லாராவின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீர்ர் ஹசிம் ஆம்லா(101 இன்னிங்ஸ்)முதலிடத்திலும், விண்டீஸ் அணியி விவ் ரிச்ச்ர்ட்ஸ்(114 இன்னிங்ஸ்) மற்றும் இந்தியாவின் விராட் கோலி(114) 2வது இடத்திலும், விண்டீஸ் அணியின் லாரா(118) மற்றும் ஷிகர் தவான்(118) 3வது இடத்திலுன், நியூசிலாந்து வீரர் 119 இன்னிங்சுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.