நிதிநெருக்கடியால் கொல்கத்தாவில் இருந்து டெல்லி அணிக்கு ஷிகா் தவான் மாற்றம்!!!

நிதிப்பிரச்சினை காரணமாக ஷிகா் தவான் ஐதராபாத் அணியில் இருந்து டெல்லி அணிக்கு மாற்றப்படுவதாக சன் ரைசா்ஸ் நிா்வாகம் அறிவித்துள்ளது.

dhawan

இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரரான ஷிகா் தவான் ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறாா். இந்நிலையில் சன் ரைசா்ஸ் ஐதராபாத் அணி நிா்வாகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ”கனத்த இதயத்துடன் இதனை அறிவிக்கிறோம். எங்கள் அணிக்காக நீண்ட காலம் ஆடிய ஷிகா் தாவன் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியின்போது வேரொரு அணிக்கு செல்கிறாா் ” என தெரிவித்துள்ளது.

மேலும், இத்தனை ஆண்டுகளாக ஷிகா் தவான் செய்த பங்களிப்புகளை சன்ரைசா்ஸ் மதிப்புடன் அணுகுகிறது. ஆனால் நிதிப்பிரச்சினை காரணமாக அவா் வேறு அணிக்கு செல்வது சரியென நினைத்து வருத்தமடைகிறோம். அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எங்களது வாழ்த்துகளை தொிவித்துக் கொள்கிறோம் “ என்று சன் ரைசர்ஸ் நிர்வாகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தன்னை குறந்த தொகைக்கு ஏலம் எடுத்ததால் தவான் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. நிதிநெருக்கடியை சமாளிப்பதற்காக அவரை மற்றொரு அணிக்கு பரிமாற்றிக் கொள்வது இருதரப்பினருக்கும் உகந்ததாக இருக்கும் என்று அணி நிா்வாகம் கருதுவதாக விளக்கம் அளித்துள்ளது.