வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்ற நடிகை ஷில்பா ஷெட்டி…!

இந்திய திரைப்பட நடிகையும், பிரபல மாடலமாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி.

கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2012 ஆம் ஆண்டு ‘வியான்’ எனும் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தற்போது ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்தரா தம்பதியர்க்கு, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தைக்கு சமீசா ஷெட்டி குந்த்ரா என பெயர் வைத்துள்ளதாக ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார்.

இந்த குழந்தை வாடகை தாய் மூலம் பெற்றெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.