வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு முத்தமா…? வைரலாகும் ஷில்பா ஷெட்டியின் வீடியோ….!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் திரைத்துறை பிரபலங்கள் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு வீடியோக்கள் தொடங்கி அன்றாட நடவடிக்கைகளையும் பகிர்ந்து வருகின்றனர்

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவருடன் செய்த டிக் டாக் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், பிஸியாக வேலைபார்க்கும் ஷில்பா ஷெட்டிக்கு அவரது கணவர் ராஜ்குந்த்ரா முத்தம் கொடுக்க வர, அவரைத் தடுத்து தான் வேலை செய்து கொண்டிருக்கும் போது இப்படி எல்லாம் முத்தம் கொடுத்து டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்.

அப்போது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண், நானும் பல தடவை சொல்லிவிட்டேன். கேட்க மாட்டேன் என்கிறார் என்று ஷில்பா ஷெட்டியைப் பார்த்து கூறுகிறார். இதையடுத்து தனது கணவரை வெளுத்து வாங்குகிறார் ஷில்பா ஷெட்டி.

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.