கொரோனா பீதி: வெளிநாட்டு கப்பல்கள் சென்னை வர 31ந்தேதி வரை தடை…

சென்னை:

ந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை துறைமுகத்துக்கு வெளிநாட்டு  கப்பல்கள் வர 31ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சீனாவின் கொரோ வைரஸ் உலக நாடுகளை பீதிக்குள்ளாகி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு ஏராளமானோர் பலியாகி வரும் நிலையில், இந்தியாவிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 61 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையொட்டி, வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை வெளிநாட்டுப் பயணிகள்  கப்பல்  சென்னை வருவதற்கு வரத் தடை விதிக்கப்படுவதாக சென்னை துறைமுகம் அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசின் முடிவின் படி தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை துறைமுகம் தெரிவித்துள்ளது.