சீரடி

 மகாராஷ்டிரா மாநிலம் சீரடி விமான நிலையத்தை இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஷிரடி – சென்னை விமானத்துக்கு கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார்.

சாய்பாபா வாழ்ந்த இடம் மகாராஷ்டிராவில் உள்ள ஷீர்டி,   இது தமிழில் சீரடி என அழைக்கப்படுகிறது.   கடந்த 1918 ஆம் வருடன் விஜயதசமி அன்று சாய்பாபா சமாதி அடைந்தார்.   இது அவர் சமாதியாகிய வருடத்துக்கு நூற்றாம் ஆண்டாகும்.   அதை சிறப்பிக்கும் வ்கையில் சீரடி விமானநிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்.  இங்கிருந்து சென்னை செல்லும் முதல் விமானத்தை கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார்.  மகாராஷ்டிரா அரசு ஆன்மிக தலங்களை முன்னேற்றும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 80000 பேர் வருகை தரும் சீரடி நகரத்துக்கு வார இறுதி நாட்கள், விடுமுறைகள் மற்றும் பண்டிகை நாட்களில் சுமார் 5 லட்சத்துக்கு மேல் வருகை தருகிறார்கள்.