சாய் பாபாவை தரிசிக்க ஷீரடிக்கு ஏப்ரலில் விமான வசதி

ஷீரடி:

ஷீரடியில் அடுத்த மாதம் முதல் விமானநிலையம் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவில் மிகவும் பிரத்தி பெற்றதாகும். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் இந்த கோவிலுக்கு வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர்.

ரெயில், கார், பஸ், போன்றவை மூலமே ஆண்டுதோறும் லட்சகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு விமானநிலையம் இல்லாதது பக்தர்களுக்கு பெரும் குறையாக இருந்து வந்தது. ரூ. 300 கோடி செலவில் புதிதாக விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

6 கி.மீ. தூரத்திற்கு விமானநிலைய சுற்றுசுவர் அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 500 மீட்டர் ரன்வே கொண்ட வகையில் இந்த விமான நிலைய வடிவமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 3 ஆயிரம் மீட்டரில் டெர்மினல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு சாய் சன்ஸ்தன் அறக்கட்டளை ரூ. 45 கோடி வழங்கியுள்ளது.

வரும் கோடை காலத்திற்குள் இந்த விமானநிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் விமானங்கள் இங்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் சர்வதேச விமானங்கள் ஷீரடிக்கு நேரடியாக இய க்கப்படும் சூழல் உருவாகும். கட்டுமான செலவுகளை ஒரு ஆண்டில் மீட்டுவிட முடியும்.

மேலும், இந்த 2017ம் ஆண்டு சாய்பாபாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஷீரடியில் விமான நிலையம் அமைக்க மும்பை முன்னாள் கலெக்டர் விஸ்வாஸ் படேலின் தீவிர முயற்சி மேற்கொண்டார்.

இதன் தேவையை உணர்ந்த முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் விமான நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மகாராஷ்டிரா விமான போக்குவரத்து ஆணையம் இதற்கான பணிகளை முன்னின்று மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.