ரூ. 51 கோடி கொரோனா நிவாரண நிதி: ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் அளித்தது

மும்பை: கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவி செய்ய மகாராஷ்டிரா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 51 கோடி ரூபாயை ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் வழங்கி இருக்கிறது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலில் உள்ளது.

பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு விஐபிக்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 51 கோடி ரூபாயை ஷீரடி சாய்பாபா கோவிலை நிர்வகிக்கும் ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் இன்று வழங்கி இருக்கிறது.