அஜ்மன்:

ரம்ஜான் நோன்பு இன்று முதல் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. சில இஸ்லாமிய நாடுகளில் நோன்பு திறக்கும் சேவைகளை சில அமைப்புகள் வழங்கி வருகிறது. இதற்கென்று பிரத்யேக கொட்டகைகள் அமைத்து செயல்படுத்தப்படுகிறது.

இந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அஜ்மன் நாட்டின் அஜ்மன் நகரில் கொட்டகை உள்ளே ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இரவு 9 மணி வரை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய உரிமம் இல்லாமல் சகர் சாப்பாடு வழங்கவும் நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இது குறித்து பொது சுகாதாரம் மற்றும் சுற்றுசூழல் துறை செயல் இயக்குனர் காலித் மொயின் அல் ஹவுசினி கூறுகையில்,‘‘ இஸ்லாமிய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், ரமஜான் கொட்டகைகள் பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. தீ விபத்து போன்றவற்றில் இருந்து பயனாளிகளை பாதுகாக்கும் வகையில் இப்தார் சேவை வழங் கும் அமைப்புகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடத்த ரம்ஜான் கொட்டகை அமைக்க நகராட்சி நிர்வாகம் உரிமம் வழங்கி வருகிறது. விதிமீறலில் ஈடுபடும் ரம்ஜான் கொட்டகை அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்ப டும். கொட்டகையில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் செய்ய தவறினால் அபராதமும் விதிக்கப்படும். கொட்டகைகளில் வழங்கப்படும் உணவு மாதிரிகளையும் தினமும் சோதனை செய்யவும் நகராட்சி நிர்வாகம் வழிவகை செய்துள்ளது.