நொய்டா

எச் சி எல் நிறுவனத் தலைவர் பொறுப்பில் இருந்த ஷிவ் நாடார் விலக அவர் மகள் ரோஷினி தலைவர் பொறுப்பை ஏற்கிறார்.

உலகப் புகழ் பெற்ற தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி நிறுவனமான எச் சி எல் இந்தியாவைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.  இந்த நிறுவனனத்தை ஷிவ் நாடார் கடந்த 1991 ஆம் வருடம் நிறுவினார்.

இங்கு சுமார் 95000 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.   கடந்த மார்ச் வரையிலான காலாண்டில் இந்த இந்நிறுவனம் ரூ.3154 கோடி லாபம் ஈட்டியது.  ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் அது ரூ.2925 கோடி ஆகக் குறைந்துள்ளது.  மொத்த வருமானமான ரூ.18,590 கோடி தற்போது ரூ.17,841 கோடியாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் தலைவர் பொறுப்பில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.

இன்று (அதாவது 2020ஆம் ஆண்டு ஜூலை 17) முதல் அந்த பொறுப்பில் அவர் மகள் ரோஷினி நாடார் மலஹோத்ரா நியமிக்கப்படுகிறார்.

ஷிவ் நாடார் இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் தலைமை கொள்கை அதிகாரியாகவும் நீடிக்க உள்ளார்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.