சிவசேனா – பாஜக இடையில் அரசியல் பேரம் : முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர்

மும்பை

த்தியில் பாஜகவின் 4 ஆண்டுகால சாதனைகள் குறித்த சம்பர்க் சே சமர்தன் என்னும் பிரசார இயக்கம்  நடந்து வருகிறது.    இந்த இயக்கத்தின் சார்பாக  கபில் தேவ்,  மாதுரி தீட்சித் உள்ளிட்டோரை பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்தார்.

அத்துடன் அவர் சிவசேனா தலைவர் உதவ் தாக்கரேவையும் சந்தித்து இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.     அவர்கள் பேசியது குறித்த விவகாரம் வெளியாகவில்லை.

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான அசோக் சவான், “அமித்ஷா மற்றும் உதவ் தாக்கரே இடையில் நடந்த சந்திப்பு அரசியல் பேரம் ஆகும்.    சிவசேனா எப்போதும் பாஜக கூட்டணியை முறித்துக் கொள்ளாது.   பாஜகவை சிவசேனா விமர்சிப்பது  பேரத்தை லாபகரமாக முடிக்கும் ஒரு நடவடிக்கை ஆகும்.  சிவசேனாவின் அரசியல் தந்திரங்களில் இதுவும் ஒன்று” என தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Shiv sena and BJP is making negotiations : Ex maharashtra CM
-=-