மும்பை: மசூதிகளில் பயன்படுத்தப்பட்டு  கூம்புவடிவ ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில அரசு மத்தியஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதை சிவசேனாவின் ஊதுகுழாலான சாம்னா பத்திரிகை தலைமையம் தீட்டி உள்ளது.

முஸ்லீம் குழந்தைகளுக்காக “அஸான்” பாராயணப் போட்டியை ஆன்லைனில் நடத்த சிவசேனாவின் மும்பை-தெற்கு விபாக் பிரமுக் (பிரிவுத் தலைவர்) பாண்டுரங் சக்பால் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன. ஒலி மாசுப்பாட்டை குறைக்கும் நோக்கில் சிவசேனா தலைவர் பாண்டுரங் சாக்பாலின் பரிந்துரையைத் தொடர்ந்து, இந்த விவகாரம் விவாதப்பொருளாக மாறி உள்ளன. இதைத்தொடர்ந்தே உத்தவ்தாக்கரே அரசு மத்தியஅரசுக்கு, கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை உபயோகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2005-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நாடு முழுவதும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில், கோவில்கள், மசூதிகளில்  தடையை மீறி   கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான், சிவசேனா தலைவர்களில் ஒருவரான  சாக்பால், ஒலி மாசை குறைக்கும் வகையில், மசூதிகளில்  கூம்புவடிவ ஒலிப்பெருக்கிகள் உபயோகிப்பதை தடை செய்யுமாறு,  “அஸான்” போட்டியை (“Azaan” competition ) ஆன்லைனில் நடத்துமாறு ஒரு முஸ்லீம் அறக்கட்டளைக்கு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.  மக்கள் வெளியே வந்து கூடுவதை தவிர்க்கும் வகையில், அஷான் போட்டிகள், மத சடங்குகள் மற்றும் பண்டிகைகளை வீட்டிலிருந்து டிஜிட்டல் முறையில் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து,  மகாராஷ்டிரா அரசு, மசூதிகளிலும் கூம்புவடிவ ஒலிப்பெருக்கிகளை தடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சிவசேனாவின் சாம்னா  தீட்டியுள்ள தலையங்கத்தில், இந்த பிரச்சினை ஒலி மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியது. ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்தியஅரசை  கேட்டுக் கொண்டுள்ளது. ஒலி மாசுபாட்டைத் தடுக்க மசூதிகளில் ஒலிபெருக்கிகளை நிறுத்தும் நடவடிக்கை குறித்து, உறுதியான நடவடிககையை  மையம் அறிவிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி உள்ளது.