மும்பை:

காராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க தேவைப்பட்டால் ஆதரவளிக்க தயார் என தேசியவாத காங்கிரசும் காங்கிரஸ் கட்சியும் கூறியுள்ளது. இந்த நிலையில், மராட்டிய ஆளுநரை சிவசேனா கட்சி நிர்வாகி திவாகர் ராவ்தே சந்தித்து பேசினார். இதனால் மாநிலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கவர்னரை சந்திக்க சென்ற சிவசேனா நிர்வாகி திவாகர் ராப்தே.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், பாஜக, காங்கிரஸ், சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் உள்பட எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டது.

288 தொகுதிகளைக்கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. தேர்தலில் அதிகப்பட்சமாக பாரதிய ஜனதா கட்சி 105 இடங்களை கைப்பற்றி உள்ளது. கூட்டணி கட்சியான சிவசேனா 65 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 46 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி  54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அத்துடன், பகுஜன் விகாஸ் அகாதி கட்சி 3 இடங்களிலும், அகில இந்திய மஸ்ஜில் கட்சி, பிரகார் ஜனசக்தி,  சமாஜ்வாதி கட்சிகள் தலா 2 இடங்களிலும் சுயேச்சைகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், பாஜக சிவசேனை கூட்டணியில், சிவனோ கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு கோரிக்கையால் சலசலப்பு எழுந்துள்ளது. முதல்வர் பதவி உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு பாஜக தலைவர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சிவசேனா ஆட்சி அமைக்க விரும்பினால், ஆதரவு தருவதாக தெரிவித்து உள்ளது.

கவர்னருடன் முதல்வர் பட்னநாவிஸ் சந்திப்பு

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்க பாஜக, சிவசேனை தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று காலை சிவசேனா கட்சியின் முக்கிய நிர்வாகியான திவாகர் ராவ்தே ஆளுநரை சந்தித்து பேசினார். அப்போது, ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இதைத்தொடர்ந்து மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் கவர்னர் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்.