காஷ்மீரில் தேர்தல் அரசியலை பாஜக மீண்டும் தொடங்கிவிட்டது….சிவசேனா

மும்பை:

ஜம்மு காஷ்மீரில் பிடிபி.யுடனான கூட்டணியை பாஜக முறித்துவிட்டது,. இதனால் முதல்வர் மெஹபபூபா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு கவர்னர் ஆட்சி அமலில் உள்ளது. சில தினங்களுக்கு முன் பாஜக தலைவர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் சென்று தொண்டர்களிடையே உரை நிகழ்த்தினார்.

இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர் நாளேடான சாமனாவில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘‘2014-ல் மக்கள் ஜனநாயக கட்சியுடன் பா.ஜ.க தான் தாமாக முன்வந்து கூட்டணி அமைத்தஐ. இப்போது அந்த முகமூடியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க.வின் இது போன்ற சதிவேலைகளால் மக்கள் சோர்ந்து விட்டதாகவும், உண்மையை பேச யாராவது பா.ஜ.க.வுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வளர்ச்சிகள் இல்லை என்றும் பயங்கரவாதம் அதிகரித்து விட்டதாகவும் கூறும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா, 3 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது ஏன் கேள்வி எழுப்பவில்லை?. 3 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது எந்தப் பிரச்சினைகளுக்கும் பொறுப்பேற்காமல், மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, தற்போது கூட்டணியை முறித்தபின் குற்றம் சாட்டுகிறது’’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.