பணமதிப்பிழப்புக்கு பின் குஜராத் வங்கியில் அதிக டெபாசிட்…பாஜக மீது சிவசேனா தாக்கு

மும்பை:

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘‘வங்கிகளின் கடன் பெற்ற தொழிலதிபர்கள் வெளிநாடு தப்பிச் சென்ற விவகாரத்தில் ஆர்பிஐ கவர்னர் மற்றும் வங்கி தலைமை அதிகாரிகள் மீது புதிய நிதியமைச்சர் பியூஷ் கோயல் என்ன நடவடிக்கை எ டுத்துள்ளார்?.

மோசடியாக கடன் கொடுத்த எத்தனை வங்கி அதிகாரிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அமித்ஷா இயக்குனராக இருந்த குஜராத் மாநிலம் அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5 நாளில் ரூ.745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

குஜராத் பாஜக அமைச்சர் ஜெயஷ் வி ராடாடியா தலைவராக இருந்த ராஜ்காட் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.693.19 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. எப்படி ஒரு வங்கியில் இவ்வளவு அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டது?.

இது முக்கியமான பிரச்னை. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். பணமதிப்பிழப்புக்காக இந்த நாடு மிகப் பெரிய விலையை கொடுத்துள்ளது. முறைசாரா தொழில்கள் முடங்கிவிட்டன. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த கட்டுரையில், ‘‘பணமதிப்பிழப்புக்கு பின் காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் முடிவுக்கு வ ந்துவிட்டது என்று பாஜக அரசு எப்படி கூறியது?. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட மறுநாள் முதல் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் கட்டுக்கட்டாக புழக்கத்திற்கு வந்துள்ளது. நாட்டில் பொருளாதார பிரச்னை அதிகரித்து வருகிறது.

மத்திய அரசின் நிதி ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் தலைவர் மற்றும் செயல் இயக்குனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரும் முதலைகள் தப்பிச் சென்ற பின்னர் இவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். பொதுத் துறை வங்கிகள் மீது பாஜக அரசு அதிகாரத்தை செலுத்துகிறது’’ என்று தெரிவி க்கப்பட்டுள்ளது.