மும்பை

இந்துத்வா என்பது சிவசேனையின் கொள்கை எனினும் அது பாஜகவின் இந்துத்வாவில் இருந்து வேறு பட்டது என சிவசேனை இளைஞர் தலைவர் ஆதித்ய தாக்கரே கூறி உள்ளார்.

சிவசேனையின் இளைஞர் அணியின் பெயர் யுவசேனை ஆகும். இந்த அணியின் தலைவராக ஆதித்ய தாக்கரே பதவி வகிக்கிறார். இவருடைய பேட்டி மாணவ எழுத்தாளரான குர்மகர் கவுர் எழுதி உள்ள தி யங்க் அண்ட் ரெஸ்ட்லெஸ் (ஓய்வு இல்லாத இளைஞர்கள்) என்னும் புத்தகத்தில் வெளியாகி உள்ளது. இதைல் இவரைத் தவிர உமர் அப்துல்லா, சச்சின் பைலட், ஷீலா ரசித் ஆகியோரின் பேட்டிகலும் வெளியாகிஉள்ளன.

ஆதித்ய தாக்கரே மிகவும் நவீன கருத்துக்கள் கொண்டவர் ஆவார். இவர் ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்தில் 24 மணி நேரமும் நடன விடுதிகள் திறந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி பாஜக வின் கும்பல் கொலை, பிடிக்காதவர்களை தேச விரோதிகள் என குறிப்பிடுதல் உள்ளிட்ட பலவற்றையும் வெளிபடையாக கண்டித்துள்ளார்.

ஆதித்ய தாக்கரே இந்த பேட்டியில், “சிவசேனை கட்சி வலது சாரி என்பதால் எங்கள் கட்சியின் கொள்கைகளில் இந்துத்வா முதன்மையானதாகும். ஆனால் சிவ்சேனையின் இந்துத்வா வேறு மற்றும் பாஜகவின் இந்துத்வா வேறு என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். நாங்கள் வலது சாரி என்ற போதிலும் பல இடங்களில் நடுநிலை வதிகளாகவே உள்ளோம்.

நாங்கள் இந்த காலத்துக்கு ஏற்ப மின்சார பேருந்துகள், இரவு வாழ்க்கை, பிளாஸ்டிக் எதிர்ப்பு போன்ற பல இனங்களை ஆதரித்து வருகிறோம். அது மட்டுமின்றி மக்களுக்கு அரசை கேள்வி கேட்க அனைத்து உரிமையும் உண்டு என்பதை நாங்கள் நம்புகிறோம். எனவே எந்த ஒரு செய்கைக்கும் முன்பு அது குறித்து முழுமையாக ஆலோசித்த பிறகு செய்கையில் இறங்க வேண்டும்.

அரசின் பணி ஆட்சி செய்வது மட்டுமே. மத விவகாரங்களில் தலையிட எந்த அரசுக்கும் உரிமை இல்லை. மற்ற கட்சிகள் பேசுவதைப் போல் நாங்களும் மதத்டை பறி பேசுகிறோம். அது எங்கள் கொள்கையாகும். கொள்கை என்பது முக்கியமானது. ஆனால் நமது கொள்கைகளை ஏற்காதவர்களிடம் அதை அரசு திணிக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.