சிவாஜி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிப்பு: தமிழக அரசுக்கு நடிகர் பிரபு நன்றி

சென்னை:

டிகர் திலகம் சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவிப்பதாக சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு தெரிவித்து உள்ளார்.

நடிகர் திலகம்  செவாலியே சிவாஜி கணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ஏராளமான சிவாஜி ரசிகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த ஆண்டு சிவாஜி பிறந்தநாளன்று, சிவாஜி மணி மண்டபம் அடையாறில் திறக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு சிவாஜி குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரபு  சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக அரசுக்கும் நடிகர் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.