விகாஸ் துபே மரணம் – கொண்டாடும் உத்திரப்பிரதேச கிராம மக்கள்!

கான்பூர்: சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட உத்திரப்பிரதேச கிரிமினல் விகாஸ் துபேவின் மரணத்திற்காக, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளனர் கான்பூரின் ஷிவாலி கிராமத்தவர்.

அவர்கள் கூறியுள்ளதாவது, “எங்களையெல்லாம் பயமுறுத்தி வந்த ஒரு பெரிய கிரிமினல், தற்போது கொல்லப்பட்டதில் எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி. அவனை நினைத்து இதுநாள் வரை பயந்துகொண்டிருந்தோம். அவன் நினைத்தால் என்ன வேண்டுமானலும் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.

தற்போது நாங்கள் சுதந்திரமாக உணர்கிறோம். இந்த நடவடிக்கைக்கு காரணமாக காவல்துறை அதிகாரிகளை வாழ்த்தி, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

தற்போது நாங்கள் ஒவ்வொருவருமே மகிழூச்சியாக இருக்கிறோம். விகாஸ் துபேயின் கும்பலால் கொல்லப்பட்ட 8 காவல்துறையினருக்கு வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர் அம்மக்கள்.

கொல்லப்பட்ட காவல்துறையின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், விகாஸ் துபேயின் மரணத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

You may have missed