“ஷிவானி ஒகே ஆயிருச்சா” பாலாவை கிண்டலடித்த சம்யுக்தா….!

எதிர்ப்பார்த்தது போல நேற்று முன்தினம் நடைபெற்ற பிரச்சினை நேற்றும் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்தது. தனியாக சென்று பாத்ரூமை சாத்திக்கொண்டு அனிதா அழுக, போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்தனர். பின்னர் கன்பெக்ஷன் ரூமுக்கு சென்று பிக்பாஸுடன் பேசினார்.

தங்க சுரங்கம் டாஸ்க்கின் போது பாலாஜி குழுவின் ஸ்ட்ரேட்டஜியை பார்த்த சனம் ஷெட்டி இப்படிலாம் துணி எடுத்து உள்ளே போகக்கூடாது என அட்வைஸ் செய்தார். இதற்கு யாருமே எதிர்பாராத வகையில் சம்யுக்தா பதிலடி கொடுத்தார்.

நேற்று பிக்பாஸ் வீட்டில் பாலாஜி தேடி எடுத்து வந்த தங்க காசுகளை ஜித்தன் ரமேஷ் திடீரென ஆட்டைய போட்டார். அவருடன் சேர்ந்து ஷிவானியும் அதை வேகமாக அள்ளினார். ரமேஷிடம் வேகம் காட்டிய பாலாஜி, ஷிவானியை ஒரு பேச்சுக்கு கூட ஒன்றும் சொல்லவில்லை. இதனால் அனைவரும் சந்தேக பார்வை வீசி வருகின்றனர் .

தற்போது வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில் கிட்டதட்ட அனைத்து போட்டியாளர்களும் ஒன்றுகூடி பாலாவை எதிர்ப்பது போல இருக்கிறது. பின்பு அவர் தனியாக அமர்ந்து கண்ணீர் விட்டு அழுவதையும் காண முடிகிறது.

இரண்டாவது புரோமோவில் ஷிவானி அவருக்கு ஆறுதல் கூறுவது போல “இதில் என்ன இருக்கிறது. இதுதான் உங்க ஸ்டைல்” என்று கூறுகிறார். மேலும் அது குறித்து சம்யுக்தா பேசும் பொழுது “ஷிவானி என்ன சொன்னா. ஓகே ஆயிருச்சா” என்று டபுள் மீனிங்கில் கேட்கிறார். அதற்க்கு பாலாவும் வெட்கப்பட்டு சிரிக்கிறார்.