சேஃப் கேம் குறித்து போட்டுடைத்த பாலாஜி….!

பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்குகள் இந்த வாரம் முழுவதும் வழங்கப்பட்டது. ஏழாவது டாஸ்காக போட்டியாளர்களுக்கு பந்தை உருண்டுகொண்டே இடம்மாற்றி வைக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும்ஒருவருடன் ஒருவர் போட்டியிட வேண்டும் என சொல்லப்பட்டது.

இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் ஆரி மற்றும் ரம்யா இடையே மோதல் வெடித்து இருக்கிறது. ரம்யா நேற்று பேசும்போது நான் safe game விளையாடுகிறேன் என சொன்னார் என ஆரி சொல்ல, நான் அப்படி சொல்லவே இல்லை one sided என்று மட்டும் தான் சொன்னேன் என ரம்யா விளக்கம் தந்தார்.

ரம்யா இப்படி இடையில் பேசியதால் கோபமான ஆரி, நான் பேசும்போது நீங்கள் இடையில் பேச கூடாது. அது தான் விதியிலும் இருக்கிறது. என்னிடம் பேசும்போது நான் ஒருத்தரிடம் கூட நான் பதில் பேசவே இல்லை. இது தான் பிரச்சனை என விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் புதிய விளையாட்டு ஒன்றை பிக் பாஸ் போடுங்க போட்டியாளர்களுக்கு கொடுக்கிறார். அதற்காக ரம்யாவும் ஷிவானியும் கடுமையாக போராடுவதை பார்க்க முடிகிறது. நெகிழ்ச்சியான இந்த வீடியோ போட்டியாளர்களின் போட்டி மனப்பான்மைக்கு ஒரு சான்றாக உள்ளது என்றே சொல்லலாம்.