பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்த ஷிவானியின் தாயார்….!

இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் இந்த வாரத்துக்கான நாமினேஷன் போட்டியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

ஷிவானி, ஆஜித், ரம்யா, சோம் மற்றும் கேபி ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதாக பிக்பாஸ் கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறுவது வழக்கம். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். ஷிவானி பாத்ரூம் ஏரியாவில் நின்ற போது ஃப்ரீஸ் என பிக்பாஸ் கூறுகிறார். அப்போது அவரது அம்மா கதவு வழியாக உள்ளே அனுப்பப்படுகிறார்.

ஷிவானியின் அம்மா, “எதுக்கு இந்த ஷோவுக்கு நீ வந்த? நீ என்ன இந்த வீட்டுக்குள்ள பண்ணிட்டு இருந்தனு வெளியே யாருக்கும் தெரியாதுனு நெனைச்சிட்டு இருக்கியா” என கோபமாக பேசுகிறார். இதனை கேட்ட ஷிவானி, அதிர்ச்சியடைந்தவாறு அமர்ந்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில், ஷிவானி அம்மா வருகை தந்தது குறித்து பாலாஜி மற்றும் ரம்யா பேசி கொண்டிருக்கின்றனர். ஷிவானியின் ரியாக்சன் வெளியே வந்திருக்கும் என நினைக்கிறேன். உங்களை எதுவும் ஷிவானி அம்மா கூறவில்லை. அவரைத்தான் “தனிப்பட்ட முறையில் நீ ஏன் ஒரு முறை கூட, உன் கருத்துக்களை எடுத்து வைக்கவில்லை. அதற்கு நீ வீட்டிலேயே இருந்திருக்கலாம்” என்று கூறியதாக ரம்யா விளக்குகிறார்.