கடுங்குளிர்: உ.பி.யில் 70 பேர் பலி

லக்னோ,

ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு, குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் உ.பி. மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக 70 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தலைநகர் டில்லி உள்பட வட மாநிலங்களில் 6 டிகிரிக்கு கீழே நிலவி வருவதாகவும்,  உ.பி. மாநிலத்தில் 6 டிகிரிக்கும் கீழே குளிர் நிலவுவதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

உ.பி.யில் நிலவி வரும் குடுங்குளிர் காரணமாக பூர்வாஞ்சலில் உள்ள பிரிஜ் மற்றும் பரேலி பகுதிகளில் 22 பேரும், அலகாபாத் பகுதியில் 11 பேரும்,பந்தல்காந்த பகுதியில் 28 பேரும் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பராபங்கி மாவட்டத்தில் ராம் கிஷோர் ராவத் (40), மகேஷ் (35) ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும்,  பைசாபாத்தில் உள்ள ஹர்ஷந்த்பூரில் அம்பேத்கார்நகரில் உள்ள ஒரு குழந்தை, ராய் பரேலியின் மக்மூதுபூரில் ஒருவரும், உண்ணாஹரில் உள்ள ஒருவருமான ஹசாரந்த்பூரில் ஒருவர் இறந்தார்.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் வெப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இரவு முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதற்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் அரசு அறிவித்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சுல்தான்பூர் மாவட்டத்தில் வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸ்  இருந்ததகவும்,  லக்னோவில்  மூன்று டிகிரி செல்சியஸ் காரணமாக கடுங்குளிர் நிலவியதாகவும் கூறப்படுகிறது.

உ.பி.யில் உள்ள பர்ராச்சின் 3.4 டிகிரி செல்சியஸ், முசாபர்நகர் (4.9), கான்பூர் (4.2), பாராபங்கி (3.4), வாரணாசி, மீரட் மற்றும் லக்கிம்பூர் கேரி ஆகியவை 5 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.