ஒலிம்பிக் ஈட்டி எறிதலுக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் ஷிவ்பால் சிங்!

பிரிட்டோரியா: ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் பங்கேற்கும் தகுதியை எட்டியுள்ளார் இந்தியாவின் ஈட்டி எறிதல் நட்சத்திரம் ஷிவ்பால் சிங்.

தென்னாப்பிரிக்காவில் ACNW தடகளத் தொடர் நடந்தது. இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இந்தியாவின் ஷிவ்பால் சிங், அதிகபட்சமாக 85.47 மீட்டர் தூரம் எறிந்து, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இவர், தனது 5வது வாய்ப்பில் இச்சாதனையை செய்தார். இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கும் தகுதியைப் பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு, இந்தியாவின் சார்பாக தகுதிபெறும் இரண்டாவது நபரானார் ஷிவ்பால் சிங். ஏற்கனவே நீரஜ் சோப்ரா தகுதிபெற்றுள்ளார்.