கமல்நாத் பதவி ஏற்பில் கைகளை உயர்த்தி வாழ்த்திய சிவராஜ் சிங் சவுகான்

போபால்

மல்நாத் மத்திய பிரதேச முதல்வராக பதவி ஏற்றதற்கு முன்னாள் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கைகளை உயர்த்தி வாழ்த்தி உள்ளார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ். சமாஜ்வாதி, மற்றும் சுயேச்சைகள் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தன.   கடந்த 13 ஆம் தேதி மூத்த காங்கிரஸ் தலைவர் கமல் நாத் முதல்வராக கட்சி தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆளுநர் ஆனந்திபென் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.  அதை ஒட்டி அவர் அழைப்பை ஏற்று கமல்நாத் முதல்வர் பதவி ஏற்றார்.   போபாலில் நடந்த விழாவில் கமல்நாத்துக்கு முதல்வராக ஆளுநர் பதவி ஏற்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் மத்தியப் பிர்தேச முன்னாள் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்,  மன்மோஹன் சிங், ராகுல் காந்தி,  முக ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, குமாரசாமி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.    திருணாமுல் காங்கிரஸ் சார்பாக மம்தா பானர்ஜி கலந்துக் கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பதிலாக அந்த கட்சியின் வேறு இரு தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த பதவி எற்பு விழாவின்  போது மகிழ்ச்சியுடன் காணப்பட்ட மத்திய பிரதேச முன்னாள் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்  தனது அருகில் இருந்த கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா ஆகிய இருவரின் கைகளைப் பிடித்து உயர்த்தி கமல்நாத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.  இந்நிகழ்வு விழாவுக்கு வந்திருந்தவர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.