நமீதாவுக்கு ஷாக் கொடுத்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று ஆரவாரமாய் விளம்பரம் செய்ய்பட்டுவந்தது. ஆனால், “சிலர்தான் பிரபலம்.. மற்ற பலர் சீன்லயே இல்லையே” என்று சமூகவலைதளங்களில் கலாய்க்கிறார்கள் ரசிகர்கள்.

ஆனாலும் சஸ்பென்ஸாக வைத்திருந்து 15வது நபராக நமீதாவை கலந்துகொல்ள வைத்திருக்கிறது பிக்பாஸ் டீம்.

நேற்று ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில், நமீதாவுடன் உரையாடினார் தொகுப்பாளர் கமல்.

சமீபகாமலாய் ஆன்மிகத்தில் நமீதாவுக்கு மிகவும் நாட்டம் ஏற்பட்டிருப்பது குறித்து கமல் கேட்டார்.

பிறகு நமீதாவிடம், “கடவுளிடம் பேசுவீர்களா” என்றார். அதற்கு நமீதா, “ஆமாம்” என்றார் சிரித்தபடியே.

அதற்கு கமல், “கடவுளிடம் நாம் பேசினால் பக்தி. கடவுள் நம்மிடம் பேசினால் பைத்தியம்!” என்று சொல்லி சிரிக்க.. டென்ஷன் ஆகிவிட்டார் நமீதா. பிறகு டக்கென சுதாரித்து சிரித்து வைத்தார்.

“சமீபத்தில்தான் மகாபாரதம் பற்ற பேசி சர்ச்சையில் சிக்கினார் கமல். இப்போது தேவையில்லாமல் பக்தி, பயித்தியம் என்று பேசி சர்ச்சையை கிளப்புகிறார். இது தேவையா” என்கிறர்கள் கமல்  ரசிகர்கள்.

You may have missed