Random image

அதிர்ச்சி: கடந்த 6 மாதங்களில் 260 சிறுத்தை புலிகள் காணவில்லை

இந்தியாவில் 2018ம் ஆண்டில் மட்டும் 260சிறுத்தை புலிகள் இறந்துள்ளதாகவும், 90சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டதாகவும் வனவிலங்கு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 1,593 சிறுத்தை புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் தரவுகள் கூறுகிறது.
leopards
2018ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 260 சிறுத்தை புலிகள் கொல்லப்பட்டுள்ளன. சிறுத்தை புலிகள் தோல், நகம் மற்றும் பற்களுக்காக வேட்டையாடப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. தற்போது 55 சிறுத்தை புலிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறும் வனத்துறை அதிகாரிகள் 35 சிறுத்தைகள் சுடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். உலகில் பல்வேறு பகுதிகளில் சிறுத்தைகளின் உடல் பாகங்கள் விற்கப்படுவதாக விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். சர்வதேச வர்த்தக சந்தையில் சட்டவிரோதமாக விலங்குகளின் பாகங்கள் விற்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், சரணாலயங்கள், பூங்காக்கள் மற்றும் பிற இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புலிகள் வேட்டையாடப்படுவதை குறைத்தது போலவே சிறுத்தை புலிகள் கொல்லப்படுவதை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிருகங்களை வேட்டையாட காட்டுப்பகுதிக்குள் செல்வதால் சில விலங்குகள் மனிதர்களை தாக்குகின்றன. ஹிமாச்சலபிரதேசம், உத்ராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதால் அதிக அளவிலான மக்கள் மிருகங்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் விலங்குகள் நல வாரியத்தின் தலைவரான அனிஷ் அந்தேரியா, “ 90 சிறுத்தைபுலிகள் வேட்டையாடப்பட்டுள்ளது. இதில் சில சிறுத்தை புலிகள் மின்சாரம் செலுத்தியும், விஷம் வைக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளன. எஞ்சிய சிறுத்தைகளின் மரணம் குறித்து தெளிவாக தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

இதே நிலை நீடித்தால் இந்தியாவில் சிறுத்தை புலிகளின் இனம் அழியும் அபாயம் உள்ளதாக விலங்குகள் நல வாரியமும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.