அதிர்ச்சி: சிறுமிகளை விற்ற தந்தை!

போபால்:

பெற்ற தந்தையே தனது இரு சிறுவயது மகள்களை விலைக்கு விற்ர சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

grls_liveday_pibiml

உத்திரபிரதேசம் மாநிலத்தில்  பிகார் கிராமத்தை சேர்ந்தவர் ராம். நிரந்தர வேலை இல்லாத இவர், கிடைக்கும் கூலி வேலைகளைச் செய்துவந்தார். திருமணமான இவருக்கு  இரு மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.

கடந்த வருடம் இவர் மனைவி, நோய்வாய்ப்பட்டு  உயிரிழந்தார். இதனால் குழந்தைகளை கவனிக்க முடியாமல் ராம்  தவித்துவந்தார். குழந்தைகளை விட்டுவிட்டு  கூலி வேலைக்கும் செல்ல முடியாத நிலை.

இதையடுத்து தனது இரண்டு மகள்களையும்  அதே ஊரில் உள்ள இருவரிடம்  இருபதாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டார்.  அதோடு,  தனது மகனை தான் வேலை செய்யும் இடத்திலேயே விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இப்போது தகவல் பரவியதை அடுத்து ராமை போலீஸார் தேடிவருகின்றனர்.