அதிர்ச்சி!! இளம்பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் அடித்து இழுந்து செல்லப்பட்டார்

பீகார் மாநிலத்தில் இளம்பெண் ஒருவரை சிலர் நிர்வாணப்படுத்தி சாலையில் அடித்து இழுந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் உயிரிழக்க, அதற்கு காரணம் அப்பெண் தான் எனக் கூறி கிராம மக்கள் இந்த வெறிச்செயலை செய்துள்ளனர். இது தொடர்பாக 15 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

womenattack

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிஹியா பகுதியில் 19 வயதான பிம்லேஷ் சாவ் என்ற இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து கொள்ளப்பட்டுள்ளார். அவரது உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. இந்த தகவல் இளைஞரின் சொந்த கிராமமான தாமோதர்பூர் மக்களுக்கு தெரியபடுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கிராம மக்கள் பிம்லேஷ் சாவ் உடலை பார்த்தி ஆத்திரம் அடைந்தனர். அவரின் உடலில் காயங்கள் இருந்ததினால் அவர் கொள்ளப்பட்டதாக யூகித்தனர். பிம்லேஷ் சாவ் மரணத்திற்கு ரயில்வே இருப்புப்பாதையை ஒட்டி வசிக்கும் ஒரு இளம்பெண் தான் காரணம் என அவர்கள் கருதினர். இதனையடுத்து, அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற சிலர் வலுக்கட்டாயமாக அவரை இழுத்து வந்து விசாரித்தனர். அப்போது ஒரு சிலர் அந்த பெண் மீது தாக்கினர். திடீரென சிலர் அவரது ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தினர். அதே நிலையில் அடித்துக் கொண்டே அந்த பெண்ணை சாலையில் இழுத்து சென்று அசிங்கப்படுத்தினர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டத்தை கலைக்க முயன்றனர். கிராம மக்கள் கலைந்து செல்ல மறுக்கவே போலீசார் வானத்தை நோக்கி சுட ஆரம்பித்து அனைவரையும் கலைத்தனர். அதன்பிறகு பெண்ணின் மீது வன்முறையில் ஈடுபட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் உள்ளூர் தலைவர் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தன்று பொறுப்பின்மையோடு செயல்பட்ட பிஹியா காவல்நிலையத்தின் விசாரணை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முதலுதவிகள் அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அம்மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், ” சட்டம் ஒழுங்கு இல்லாத பிஹார் மாநிலத்தில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, அடித்து வன்முறை கும்பலால் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.

ஒரு பெண்ணை கொடூரமாக நிர்வாணப்படுத்தி இழுத்துச் செல்வதைப் பார்க்கும்போது என்னால் பதில் பேச முடியவில்லை. சட்டம் ஒழுங்கைப் பராமரித்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று முதல்வர் நிதிஷ் குமாரை கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன் ” எனத் தெரிவித்துள்ளார்.