க்னோ

த்திரப் பிரதேச மகராஜ் கஞ்ச் மாவட்டத்தில் காதலர்கள் துன்புறுத்தப்பட்டு விடியோ எடுத்த விவகாரத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

உத்திரப் பிரதேசத்தில் காதலர்கள இருவரை ஒரு கும்பல் பிடித்து, அவர்களைத் தாக்கி அவர்கள் இருவரையும் நிர்வாணமாக்கி, பல ஆபாச போஸ்களில் வீடியோ எடுத்தது.  இந்த வீடியோ வைரலாக அனைத்து சமூத தளத்திலும் பரவியது இது குறித்து மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வீடியோவில் உள்ள பெண் ஒரு மைனர்.  அவரும் அவருடைய காதலரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது இந்த வன்முறைக் கும்பல் குறுக்கே சென்று அவர்கள் இருவரும் என்ன ஜாதி என்று கேட்டார்களாம்.  அவர்கள் தங்கள் ஜாதியை சொல்லி இருக்கிறார்கள்.  அவர்கள் தலித் இனத்தை சார்ந்தவர்கள் என்னும் காரணத்தினால் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது நடந்து ஒன்பது நாட்களுக்கு மேல் ஆகிறதாம்.  அந்தப் பெண் முதலில் தன் பெற்றோரிடம் சொல்லத் தயங்கினாலும் பிறகு தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி கதறி அழுதிருக்கிறார்,  அதிர்ந்து போன பெற்றோர் காவல்துறைய அணுகி இந்த கொடுமையை முறையிட்டு, அந்த கும்பலை கைது செய்யுமாறு புகார் கொடுத்துள்ளனர்.

காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யாமல் சமரசம் பேசி, பெண்ணின் பெற்றோர்களிடம் ரூ.37000 வாங்கிக் கொண்டு அமைதியாக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணை அந்தப் பெண்ணுக்கு மானப் பிரச்னை ஆகிவிடும் எனவும் அச்சுறுத்தி உள்ளனர்.

அதற்குள் வைரலான இந்த வீடியோவை பார்த்த போலீஸ் உயரதிகாரிகள் வற்புறுத்தலின் பேரில் காவல்துறை விசாரணையைக் கையில் எடுத்துள்ளது.  பானர்சிங்கா என்னும் கிராமத்தை சேர்ந்த இருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடி வருவதாக காவல் துறை தரப்பில் சொல்லப்படுகின்றது.

இது குறித்து உ. பி.  அரசு மீதும் முதல்வர் யோகி அமர்நாத் மீதும் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.  ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று காதலர்களை அடித்து, உதைத்து, நிர்வாணமாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்ததை அவர்கள் சுட்டிக்காட்டி பாதுகாப்பு என்பது மாநிலத்தில் இருக்கிறதா என கேட்கின்றனர்.

சமாஜ்வாதி கட்சித் தலவர்களில் ஒருவரான ராஜேந்திர சவுத்ரி “பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு என்பதே இல்லை” எனக் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் ஒரு பெண் ஒரு குழுவினரால் மானபங்கம் படுத்தப்பட்ட வீடியோ இதே போல வைரலாக பரவியதும், அதையொட்டி 12 பேர் கைது செய்யப்பட்டதும் தெரிந்ததே