“ஷூட் மாடி தொந்ரா ஏனு இல்லா!”: கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிர்ச்சி பேச்சு
“ஈவு இரக்கம் காட்டாமல் குற்றவாளிகளை சுட்டுத்தள்ளுங்கள்” என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில், குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் மாண்டியா மாவட்ட நிர்வாகியாக இருந்தவர்ஹொன்ஸலகெரே பிரகாஷை.
இவர் நேற்று மாலை மைசூர் சாலை வழியாக காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இவரது காரை பின் தொடர்ந்த சில மர்ம நபர்கள், காரை வழிமறித்து நிறுத்தினர். பிறகு பிரகாஷை வாகனத்தில் இருந்து கீழே இறக்கி சரமாரியாகத் தாக்கினர். பெரிய கத்திகளால் அவரின் கழுத்தில் பலமாகக் கீறினர். இதில் படுகாயமடைந்த பிரகாஷ், ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், காயமடைந்த பிரகாஷை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் மரணமடைந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் குமாரசாமிக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆத்திரம் அடைந்த குமாரசாமி, “ பிரகாஷ் மிகவும் நல்ல மனிதர். அவரை ஏன் கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை. அவரைக் கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரக்கமின்றிக் கொல்லுங்கள். சுட்டுத்தள்ளுங்கள், எந்தப் பிரச்னையும் வராமல் பார்த்துக்கொள்கிறேன்! என்று ஆவேசமாக கூறினார்.

குமாரசாமி போனில் பேசியதை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“ஒரு முதல்வரே சட்டதிட்டங்களை மதிக்காமல் சுட்டுத்தள்ளுங்கள்.. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன் என்று பேசலாமா: என்று சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நிர்வாகி பிரகாஷ் கொலையைவிட குமாரசாமியின் ஆத்திரப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குமாரசாமி பேசிய காட்சி: (நன்றி: ஏ.என்.ஐ.)
https://twitter.com/ANI/status/1077399726478233601