சுஷாந்த் ரசிகர்கள் தொடர் தற்கொலையால் ஷாக்.. 6 பேர் பலி..

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. தோனியாக சுஷாந்த் தத்ரூபமாக நடித்திருந்ததால் ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்றார். ஆனால் அவரது வளர்ச்சியை பாலிவுட்டில் உள்ள சிலர் விரும்பவில்லை. அவருக்கு வரவிருந்த பட வாய்ப்புகளை வராமல் தடுத்தனர். இதில் அப்செட் ஆன சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சுஷாந்த் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்த ஒடிசாவை சேர்ந்த 13 வயது ரசிகை ஒருவரும், 50 வயது ரசிகர் ஒருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.


அதேபோல் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 12 வயது சிறுவன், கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் மாணவர், விசாகப்பட்டணத்தை சேர்ந்த பெண்ணும் தற்கொலை செய்து கொண்டு இறந்தனர்.
ஏற்கனவே சுஷாந்த் தற்கொலை செய்ததை அறிந்த அவரது உறவுக்கார் பெண் சாப்பிடா மலிருந்து உயிர் விட்டார்.
சுஷாந்த் ரசிகர்களின் தொடர் தற்கொலை திரையுலகினரும், போலீஸாரும் அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளனர்.

You may have missed