சிட்னி:

கங்காருவின் பிடியில் இருந்த தனது வளர்ப்பு பிராணியான நாயை ஆஸ்திரேலியர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ முதன்முதலாக 2016ம் ஆண்டில் எடுக்கப்பட்டது.

பன்றி வேட்டை சென்ற உயிரியில் பூங்கா ஊழியரான க்ரெய்க் டோன்கின்ஸ் என்ற அந்த நபரின் நாயை கங்காரு ஒன்று பிடித்து வைத்துக் கொண்டது. நாயை விடுவிப்பதற்காக அந்த கங்காருவை டோன்கின்ஸ் தனது கையால் அடித்தார். இதை தொடர்ந்து அவரை அடிக்க முயற்சித்த கங்காரு பின்னர் நாயை விட்டுவிட்டு ஓடி விட்டது.

கங்காரு தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளும் நேஷனல் ஜாக்கிராபி வல்லுனர் மார்கோ பெஸ்டா பையான்சட் கூறுகையில், ‘‘ அந்த நபர் மிகவும் அதிர்ஷ்டசாலி. பொதுவாக இது போன்ற சூழ்நிலையில் கங்காரு அந்த நபரை கொன்றிருக்கும். கங்காரு யாருடனும் இது போன்று குத்தி சண்டையிடாது. தனது வாலை தரையில் அழுத்தமாக ஊன்றி பின்னங் கால்களை தூக்கி பலமாக உதைக்கும். இதை கங்காரு செய்திருந்தால் அந்த நபர் அங்கே குடல்கள் உருவப்பட்டு வீழ்ந்திருப்பார்’’ என்றார்.

புற்று நோயால் பாதித்திருந்த தனது 19 வயது நண்பரான கைலெம் பார்விக் மற்றும் சிலருடன் க்ரெய்க் டோன்கின்ஸ் 100 கிலோ எடை கொண்ட காட்டுப் பன்றியை வேட்டையாட சென்றுள்ளார். இச்சம்பவம் நடந்த சில தினங்களில் கைலெம் பார்விக் இறந்துவிட்டார். இந்த வீடியோ வைரல் ஆவத்கு முன்பே அவர் இறந்துவிட்டார்.

‘‘அவர் சொர்க்கத்தில் இருந்து இந்த வீடியோ பார்த்து சிரித்திருப்பார். அந்த பயணத்திலேயே இது தான் முக்கிய நிகழ்வாக அமைந்துவிட்டது’’ என்று அவரது மற்றொரு நண்பரான அமோர் தெரிவித்தார்.

[embedyt] https://www.youtube.com/watch?v=FIRT7lf8byw[/embedyt]