சென்னை:

வேலூரை சேர்ந்த எம்பிஏ மாணவர் சபி என்பவர் தன்னை காதலிக்க மறுத்த வீணா என் பெண்ணை நேற்று முன் தினம் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். அதிர்ஷ்டவசமாக சிகிச்சை முடிந்து வீணா வீடு திரும்பியுள்ளார். சபி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சபி மீது ஏற்கனவே வீணா குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் சபியை எச்சரித்து மட்டும் அனுப்பிவிட்டனர்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சில்பா என்ற மாணவியை நந்தகுமார் என்பவர் நேற்று கத்தியால் குத்தியுள்ளார். நந்தகுமாரை அப்பகுதியில் இருந்த ம க்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதில் காயமடைந்த சில்பா சிகிச்சைக்கு பின்னர் குணமடை ந்துள்ளார். இவர் நந்தகுமாருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். திடீரென பேசுவதை நிறுத்திவிட்டதால் சில்பாவை குத்தியுள்ளார். இவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளார்.

முதல் சம்பவத்தில் குற்றவாளிக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளும், 2வது சம்பவத்தில் அதிகபட்சம் 5 ஆண் டுகள வரையில் மட்டுமே சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில் தான் சட்டத்தில் இடம் உள்ளது. அபராதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் இருக்கும். இது போன்ற சம்பவங்கள், முந்தைய புகார்கள் மீது போலீசார் அலட்சியமாக இருப்பதாலேயே அதிகம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மனித உரிமை ஆர்வலர் சுதா ராமலிங்கம் கூறுகையில்,‘‘ நிர்பயா சம்பவத்துக்கு பின்னர் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை நடைமுறைபடுத்துவதில்லை. எல்லா புகார்களுக்கும் கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. முறையான கவுன்சிலிங் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஆணும், பெண்ணும் எளிதில் உரையாடும் வகையில் சிறந்த கல்வி முறை வேண்டும். ஆரம்பம் முதலே இரு பாலரும் படிக்கும் கல்வி முறை வேண்டும்’’ என்றார்.

சென்னை கே.கே.நகரில் கடந்த மாதம் அஸ்வினி என்ற பி.காம் மாணவி கல்லூரி வாசலில் கொலை செய்யப்ப்டடார். இவர் கொலை செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்துள்ளார். இது போன்ற புகார்களை போலீசார் அலட்சியமாக கருதக்கூடாது என்று வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.